ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2
Sujatha 'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை.
'ஏன்? எதற்கு? எப்படி?' - முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'கேள்வி_பதில் பகுதியை மீண்டும் ஜூ.வி_யில் தொடங்கலாம்' என்று சுஜாதாவிடம் கேட்டபோது, 'நான் தயார்... ஆனால், கேள்விகளை எழுதி அனுப்புவதில் வாசகர்களுக்குப் பழைய ஆர்வம் இருக்குமா?' என்று நியாயமான சந்தேகத்தையும் எழுப்பினார்.
ஜூ.வி. வாசகர்கள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இம்முறையும் பொய்க்கவில்லை. புல்லில் தொடங்கி பிரபஞ்சம் வரைக்கும் கேள்விச் சரங்களைத் தொடுத்து, என்னையும் சுஜாதாவையும் திணறடித்துவிட்டார்கள். அன்பான, உற்சாகமான, ஈடுபாடுமிக்க 'போட்டா போட்டி'யாகவே வாசகர்களும் சுஜாதாவும் கேள்வி_பதில் அரங்கில் இணைந்து கரம் கோர்த்து, 106 அத்தியாயங்களை வெளுத்துக் கட்டினார்கள்.
இதோ... சுடச்சுட அந்த இரண்டாவது தொகுப்பும் உங்கள் கைகளில் தவழ்கிறது! விகடனின் தரமான வெளியீடுகளுக்கு இன்னொரு அணிகலனாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்துக்கும் வாசகர்களாகிய நீங்கள் பேராதரவு தருவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
Genres:
ScienceNonfiction
224 Pages