S. Viswanathan ஊரில் உள்ளவர்களின் ரகசியம் அனைத்தும் தெரிந்த சாமியார் அவர். தன்னால் இயன்ற வரை அனைவருக்கும் உதவுபவர். எதிர்பாராத வகையில் ஊருக்குள் வரும் கொள்ளைக்கூட்டத்தாரில் ஒருவன் கொல்லப்படுகிறான். தனது கூட்டத்தில் ஒருவன் இறந்து போனதால், ஊரைச் சார்ந்தவர்களில் ஒருவரின் உயிர் வேண்டும், இல்லையென்றால் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற கொள்ளைக் கூட்டத் தலைவனின் மிரட்டல் கடிதத்தில் மிரண்டு போகும் ஊர்க்காரர்கள், யாருமற்ற சாமியாரைப் பலிகொடுக்கத் தீர்மானிக்கிறார்கள். அதிலிருந்து சாமியார் தப்பினாரா? தன் மேல் மிகுந்த அன்பு கொண்டிருக்கும் குமார் என்கிற சிறுவனுக்கு நல்வழி காட்டினாரா என்பதே கதை. மனிதர்களின் பல்வேறு குணாதிசயங்களை படம்பிடித்து காட்டும் படைப்பு.
ஊரார் & ஆப்பிள் பசி ஆகிய 2 நூல்கள் அடங்கிய தொகுப்பு.
Genres:
300 Pages