சோழ மகுடம் [Chola Magudam]

விக்கிரமன்
3.93
27 ratings 1 reviews
உலகத்துக்கெல்லாம் தாயாக, பல்வேறு பெயர்களில் திகழும் அன்னை பராசக்தி, தஞ்சை மேற்குக் கோட்டை வாயில் அருகே நிசும்ப சூதனியாகக் கோயில் கொண்டு கம்பீரமாகத் திகழ்ந்தாள். கீழ்வானம் மெல்லிய வெள்ளைக் கோடுகளுடனும் செம்பொன் மஞ்சள் வரிகளுடனும் திகழும் அந்தக் காலை வேளையில், நிசும்ப சூதனியின் கோயில் அருகே புலிக்கொடி ஏந்திய இரண்டு வீரர்கள் காத்திருந்தனர். அவர்கள் சோழ மன்னர் கண்டராதித்த சோழ தேவரின் வருகைக்காகக் காத்து நின்றனர். பொழுது புலரும் முன்பே கண்டராதித்தர் தேவியின் திருக்கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வேளையில் கோயிலில் கூட்டம் அதிகமிருக்காது. அரசர் வருகையால் மற்றவர்கள் உளங்கனிந்து தொழுவதற்கு எந்த இடையூறும் இருக்காது.
Genres:
Pages

Community Reviews:

5 star
10 (37%)
4 star
10 (37%)
3 star
3 (11%)
2 star
3 (11%)
1 star
1 (4%)

Readers also enjoyed

Other books by விக்கிரமன்