சிறிது வெளிச்சம் [Sirithu Velichcham]

S. Ramakrishnan
4.25
159 ratings 11 reviews
குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன், மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்!’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்! வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள். இவற்றையெல்லாம், உண்மைச் சம்பவங்கள், ஆங்கிலத் திரைப்படங்கள், சிறுகதைகள் மூலம் நயமான வார்த்தைகளில் விளக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். நல்ல உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள நம்பிக்கை வெளிச்சத்தைக் காட்டும் நூல் இது! ஒரே இடத்தில் வேரூன்றிவிட்ட வருத்தத்தைப் போக்கத் தான் மரங்கள் பறவைகளுக்கு இடம் தருகின்றன என்கிறது ஆப்பிரிக்கப் பழமொழி, யோசித்தால் நாமும் அப்படித்தான். வாழ்நாளில் நாம் பெற முடியாத அனுபவங்களை, சந்திக்க முடியாத மனிதர்களை, காணமுடியாத நிலப்பரப்பை புத்தகங்கள் வழியாகப் பெற்றுக் கொள்கிறோம். இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத் தனது சுட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உலகச் சினிமா, இலக்கியம், பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.
Genres:
415 Pages

Community Reviews:

5 star
71 (45%)
4 star
63 (40%)
3 star
20 (13%)
2 star
3 (2%)
1 star
2 (1%)

Readers also enjoyed

Other books by S. Ramakrishnan

Lists with this book

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal]
Kallikaattu Ithigaasam
Best Tamil Classics You Must Read
176 books203 voters